Wednesday , June 28 2017
Breaking News

விண்வெளி ஜாம்பவான் காலமானார்!


விண்வெளிக்குச் சென்று பூமியைச் சுற்றpவந்த முதல் அமெரிக்கர், ஜான் கிலென் (John Glenn), 95-ஆவது வயதில் காலமானார். அமெரிக்க செனட்டராகவும் பதவி வகித்த அவர், விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்க மூத்த குடிமகனாவார்.

உண்மையான அமெரிக்கக் கதாநாயகர் அவர் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் புகழஞ்சலி செலுத்தியது.

கொலம்பஸ்ஸில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில், திரு கிலென்காலமானார்.

1962-ஆம் ஆண்டு,பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் திட்டத்தின் ஓர் அங்கமாகத் திரு கிலென், விண்வெளிக்குச் சென்றார். சுமார் ஐந்து மணி நேரத்தில் அவர் பூமியை மும்முறை சுற்றிவந்தார்.

முப்பத்து ஆறு ஆண்டு கழித்து, 1998-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 29-ஆம், தேதி மீண்டும் அவர் வரலாறு படைத்தார். தமது 77-ஆவது வயதில் அவர் விண்வெளிக்கு மீண்டும் திரும்பினார். 1984, 1988-ஆம் ஆண்டுகளில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டிகளிலும் திரு கிலென் போட்டியிட முயற்சி செய்தார்.

The post appeared first on Akuranatoday.com