பெண்களையும் விட்டுவைக்காத மாரடைப்பு! கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள்!

ஆண்களையே அதிகம் பாதிக்கும் மாரடைப்பு, பெண்களையும் விட்டுவைப்பதில்லை. ஆனால், பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பின் அறிகுறிகள் வேறுபடுகிறது என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.

இடது கையில் வலி மற்றும் அல்லது மார்பு வலி ஏற்படுவது மாரடைப்பின் அறிகுறி என்று பலரும் எண்ணிக் கொண்டிருப்பீர்கள். ஆனால், பல ஆண்டுகளாக நடந்த ஆய்வுகளில், திரைப்படங்களில் காட்டப்படுவது போல மாரடைப்பின் அறிகுறிகள் இருப்பதில்லை, அவை வித்தியாசமானது என்று கண்டறியப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, இவை பொதுவான மாரடைப்பு அறிகுறிகள் என்று கூற முடியாது. ஒவ்வொரு நபருக்கும் மாறுபடுகிறது. மேலும், பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு அறிகுறிகள், ஆண்கள் மாரடைப்பு அறிகுறிகளில் வேறுபாடும். குறிப்பாக, மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்பு தான் அறிகுறிகளே தோன்றும்.

பெண்களுக்கும் ஏற்படும் மாரடைப்பின் அறிகுறிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

காரணமில்லாத உடல் சோர்வு:
அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேஷன், கடந்த 2003 ஆம் ஆண்டில், மாரடைப்பு ஏற்பட்டு, குணமான 500 பெண்களிடம் ஒரு சர்வே நடத்தியது. அந்த சர்வேயின் முடிவுகள், பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

தோராயமாக மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதம் முன்பு, அசௌகரியமாக உணர்ந்ததாக 95% பெண்கள் தெரிவித்தனர். அது மட்டுமின்றி, விவரிக்க முடியாத, சோர்வும் இருந்ததாகக் கூறினர். கூடுதலாக, 71%, மாரடைப்பு ஏற்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே காரணமே இல்லாமல் சோர்வாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

கிளீவ்லாண்ட் கிளினிக்கிற்காக, கார்டியாலஜிஸ்ட் லெஸ்லி சோ எழுதிய கட்டுரையில், நீங்கள் புதிதாக, உடல்சோர்வை உணர்ந்தால், அது மட்டுமின்றி, அதிகப்படியாக சோர்வாக காணப்பட்டால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், வழக்கமான உடற்பயிற்சி செய்த பின் ஆற்றல் இல்லாதது போல உணர்ந்தால், ஓய்வாக இருக்கும் போதும் சோர்வாகவே இருப்பது மற்றும், படுக்கையை சரி செய்வது, உள்ளிட்ட மிகச்சிறிய அளவிலான ஆற்றல் தேவைப்படும் வேலையை செய்யும் போது நீங்கள் முழுக்க முழுக்க ஆற்றலே இல்லாமல் உணர்ந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

தூக்கமின்மை:
உங்களால் தூங்க முடியவில்லை என்றால், அது கவலைக்குரியது ஆகும். AHA எடுத்த சர்வேயின் படி, கிட்டத்தட்ட 48% மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதம் முன்பு தூக்கமின்மையை உணர்ந்ததாக தெரிவித்தனர்.

மார்பு வலி:
31 சதவிகித பெண்கள், ஹார்ட் அட்டாக் தான் என்று உறுதியாகச் சொல்ல முடியும், அழுத்தமான, மார்பை ஊடுருவும் வலியை உணர்ந்ததாகக் கூறினார். ஆனால், 43 சதவிகிதப் பெண்களுக்கு, மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு வலி எதுவும் தோன்றவில்லை.

இதைப் போன்ற, மார்பு வலி இல்லாமல் போவதே, பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பை உணர முடியாமல் போவதற்கான முதல் காரணம் என்று, அர்கான்சாஸ் மெடிக்கல் சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரியும், ஆய்வாளர் ஜான் சி மெக்ஸ்வீனி கூறினார். இன்று வரை, மார்பு வலி தான் மாரடைப்புக்கான முக்கியமான அறிகுறி என்று பலரும் கருதுகிறார்கள், என்று தெரிவித்தார்.

மூச்சுத்திணறல்:
மற்ற மாரடைப்பு அறிகுறிகளை விட, பெண்களுக்கு மூச்சுத்திணறல் என்பது மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.மார்பு வலி இருந்தாலும், இல்லை என்றாலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் நீங்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று AHA பரிந்துரை செய்கிறது.

நியூயார்க் பல்கலைக்க்கழகத்தில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்துக்கான ஜோன் ஹெச் டிஸ்ச் சென்டர், மெடிக்கல் டைரக்டர் நீஸ்சே கோல்ட்பெர்க், மாரடைப்பு அறிகுறிகளை, காய்ச்சல் அல்லது செரிமானக் கோளாறின் அறிகுறிகளாக பெண்கள் கருதுகிறார்கள். தங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதே அவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்பதை AHA விடம் விளக்கனார்.

அதிகப்படியான வியர்வை:
சுட்டி கீழ் வியர்வை இருந்து பொருள். ஒரு முறை மற்றும் எப்போதும் மற்றும் எப்போதும் மற்றும் எப்போதும் ஹைபர்ஹைட்ரோவுகள் பெற முடியும், என்ன …

மாரடைப்பின் மற்றுமொரு வழக்கமான அறிகுறி, அதிகப்படியான வியர்வை. குளிராக இருந்தாலும், வியர்த்துக் கொட்டும். இதற்குக் காரணம், உங்கள் இதயத்தின் ஆர்ட்டரிகள் மூடப்பட்டு, இதயம் ரத்தத்தை சுத்தம் செய்ய அதிகப்படியாக இயங்க அழுத்தம் ஏற்படும். இதனால் உடல் வெப்பம் குறைந்து, அதிகப்படியான வியர்வை வெளியேறும்.

பெண்களுக்கு இரவில் ஏற்படக்கூடிய, வியர்வை, மெனோபாஸ் அறிகுறி மட்டுமல்ல. அது மாரடைப்பின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

Check Also

வயது  வேறுபாடின்றி அனைவரையும் பாதிக்கக்கூடிய குடற்புண் – GASTRITIS

Gastritis சிலருக்கு எந்த அறிகுறியையும் கொடுக்காவிட்டாலும் கடுமையான வயிற்று வலி, வாந்தி, சமிபாடின்மை போன்ற நோயறிகுறிகளை ஏற்படுத்தலாம். சிலருக்கு ஏற்படும் …

You cannot copy content of this page

Free Visitor Counters