10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவைகள் அரசாங்கம் சதித் திட்டமிட்டதாகவும், ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாகவும், புதிய சதித் திட்டத்தின் மூலம் தேர்தலுக்கான நிதியை தடுக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் ஆனால் தற்போது 10 தேர்தல்களை நடத்தக் கூடிய நிதி அரசிடம் உள்ளதாகவும் 43 ஆம் படையணியின் தலைவரான படலிசம்பிக்க ரணவக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதில் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கமவும் கலந்துகொண்டிருந்தார்.

இங்கு மேலும் பேசிய சம்பிக்க ரணவக்க; இந்தத் தேர்தலை இப்போது பாராளுமன்றம் மூலம் ஒத்திவைக்க வாய்ப்பில்லை. அதற்காக கொண்டு வரப்பட்ட அரசாணைகளுக்கு எந்தத் தடையும் இல்லை. நீதிமன்றத்தின் மீது சந்தேகம் இருந்தால், கடந்த 10ம் திகதி நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைக் குழு அளித்த அறிக்கையுடன் அது மறைந்துவிட்டது. தற்போது தேர்தல் ஆணைக் குழுவுக்கு அளிக்கப்படும் செலவுகளை நிறுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மார்ச் 9 ஆம் தேதிக்கு முன் தேர்தல் ஆணைக் குழு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம்.

முதலில் தபால் மூல வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இது பெப்ரவரி 22, 23, 24 திகதிகளில் நடைபெறவுள்ளது. அதற்கு, வரும் 19ம் திகதி வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு வழங்க வேண்டும். 19ம் திகதி வாக்குச் சீட்டுகளைப் வழங்க, அவற்றை அச்சடித்து இப்போது விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், கடந்த 9ம் திகதி திடீரென வானில் இருந்து விழுந்தது போல் இந்த தேர்தலை நடத்த முடியாது. வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுதல், உரிய வாக்குச் சாவடிகளைத் தயாரித்தல், பாதுகாப்புச் சேவைகளைத் தயாரித்தல், தபால் மூல வாக்களிப்பு போன்றவற்றைச் செய்ய வேண்டும். அந்த சவாலை ஏற்று தேர்தல் ஆணைக் குழு தொடர்கிறது. எனவே, இதற்காக தேர்தல் ஆணைக் குழுவிடம் பணம் வழங்கப்பட மாட்டாது என்ற பேச்சு தற்போது எழுந்துள்ளது.

சமீபகாலமாக அரசு நடத்தும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது பணப் பற்றாக்குறை என்பது தீர்வாகாது. அரசாங்கத்தின் வருமானத்தைப் பார்த்தால் ஒரு நாள் அரசாங்கத்தின் வருமானம் இந்தத் தேர்தலை நடத்தப் போதுமானது. சமீபத்தில், தொழில் வல்லுநர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், நிர்வாக சேவைகள் உட்பட பல தரப்புக்கும் கூடுதல் வரி (Paye வரி) விதிக்கப்பட்டதால் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் இந்த வரி மூலம் இதுபோன்ற 10 தேர்தல்களை நடத்தலாம். சட்டத்தை அறிந்த அதிகாரிகள் என்ற வகையில், நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தன , பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை நினைவில் கொள்ள வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல். அரசியலமைப்புச் சட்டம் விதித்துள்ள உத்தரவுகளை அமைச்சகங்களின் செயலாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று தீர்ப்பு தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டத்தை மதிக்கும் அதிகாரி என்ற முறையில் அவர் அந்த பணியை செய்வார் என நம்புகிறோம்.

இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 10% வாக்குகளுக்கு மேல் பெறாது. பெறுவதை தடுப்பது நமது தேசிய பொறுப்பு. மகிந்த ராஜபக்ச, .சமல் உள்ளிட்ட ராஜபக்ச தலைமுறையின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது நம் அனைவரின் பொறுப்பாகும். புதிய அரசியலை உருவாக்க புதிய ஆட்கள் தேவை. அனுபவமுள்ளவர்களும் தேவை. உள்ளாட்சியை நாங்கள் சொந்தமாக நடத்த வேண்டும். 2017ஆம் ஆண்டு பாணந்துறையில் பாரிய குப்பை மேடு ஒன்று இருந்தது. அந்தப் பிரச்சனையைத் தீர்த்தோம். எதிர்காலத்தில் அந்த நிர்வாகத் திறனுக்காக நம்மை அர்ப்பணிப்போம் என்றார்.

ந.ஜெயகாந்தன் – தினக்குரல் 14/02/2023

Check Also

காத்தான்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய கடத்தல் சம்பவம்!

ஆசிரியரை கடத்தி கப்பம் கோரிய ஒருவர் கைது, மற்றொருவர் டுபாய்க்கு தப்பியோட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.சி.அஜ்வத் ஆசிரியர் …

You cannot copy content of this page

Free Visitor Counters