முகக்கவசம் அணியாதவர்கள் கைது

முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவௌியை பெணாமல் செயற்பட்ட 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று (04) காலை தெரண அருண நிகழச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 220 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 2200 பேர் கைது செய்யப்பட்டு 340 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Ada-Derana