பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20,000 கிலோ மீன்கள் நாசமாகியது


பேருவளை மீன்பிடித் துறைமுகம் ஒரு வாரமாக மூடப் பட்டிருந்தமையால் மீனவர்கள் சேமித்து வைத்திருந்த சுமார் 20,000 கிலோ மீன்கள் பழுதாகிவிட்டதால் அவை அப் புறப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், ஏனைய மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து கணிசமான அளவு மீன்கள் அரசாங்கத்தால் மற்றும் தனியார் துறையால் கொள்வனவு செய்யப்பட்டதாக மீன்வளக் கூட்டுத்தாபனத் தலைவர் எஸ்.டபிள்யூ.எல். தவுலகல தெரிவித்துள்ளார்.

தற்போது  மீன்பிடித் துறைமுகங்கள் பலவற்றில் லின்னோ இன மீன்கள் காணப்படுவதாக தவுலகல தெரிவித்துள்ளார்.

Previous articleமேல் மாகாணத்தில் நாளை முதல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளது.
Next articleஇலங்கையை சீனா மோசமாக கையாண்டுள்ளது, பிறரை வேட்டையாடும் தன்மையுடைவர்கள் எனவும் அமெரிக்க செயலாளர் கடும் தாக்குதல்