இலங்கையர்களுக்கு இந்த வருடம் 1585 ஹஜ் கோட்டாக்கள்

சவூதி அரே­பி­யாவின் ஹஜ் விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சு இவ்­வ­ருடம் இலங்கை ஹஜ் யாத்­தி­ரிகர்­க­ளுக்­காக 1585 ஹஜ் கோட்­டாக்­களை ஒதுக்­கி­யுள்­ளது.

கடந்த 2020, 2021 ஆம் ஆண்­டு­களில் கொவிட் 19 வைரஸ் தொற்­றுநோய் பரவல் கார­ண­மாக இலங்­கைக்கு ஹஜ் கோட்டா ஒதுக்­கப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இலங்­கைக்கு இவ்­வ­ருடம் 1585 ஹஜ் கோட்டா ஒதுக்­கப்­பட்­டுள்­ளதாக உத்­தி­யோகப் பற்­றற்ற முறையில் அறி­யக்­கி­டைத்­துள்­ள­தா­கவும் சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு கிடைக்­கப்­பெற்­றதும் அது தொடர்பில் திணைக்­களம் பொது மக்­க­ளுக்கு அறி­விக்கும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்சார் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் ஏற்­க­னவே பதிவு செய்து ஹஜ் யாத்­தி­ரைக்கு திட்­ட­மிட்­டி­ருப்­ப­வர்கள் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்தல் கிடைக்கும் வரை காத்­தி­ருக்கும் படியும் அவர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் முக­வர்கள் நிய­மனம் இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் அதனால் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் எவ­ருக்கும் முற்­பணம் செலுத்த வேண்­டா­மெ­னவும் வேண்­டி­யுள்ளார்.

கடந்த இரு வரு­டங்­க­ளாக உல­க­ளா­விய ரீதியில் கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் பர­வி­யி­ருந்த நிலையில் இலங்­கை­யி­லி­ருந்து எவரும் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­ள­ அனுமதிக்கப்படவில்லை.

தற்­போது கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சு இவ்­வ­ருடம் சவூதி அரே­பிய உள்­நாட்­ட­வர்கள் உட்­பட உல­க­ளா­விய ரீதியில் ஒரு மில்­லியன் யாத்­தி­ரி­கர்­களை அனு­ம­திப்­ப­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வரும் ஹஜ் கோட்டா ஹஜ் முக­வர்­க­ளுக்­கி­டையில் பகிர்ந்­த­ளிப்­பது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அரச ஹஜ் குழு­வுடன் கலந்­தா­லோ­சித்து இறுதித் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­படும்.

இதே­வேளை ஹஜ்­ மு­க­வர்­க­ளுக்கு செலுத்­தப்­ப­ட­வேண்­டிய ஹஜ் கட்­டணம் மற்றும் சவூதி அரே­பி­யாவில் முக­வர்­க­ளினால் வழங்­கப்­படும் தங்­கு­மி­ட­வ­சதி உட்­பட ஏனைய வச­திகள் தொடர்பில் அரச ஹஜ்­குழு ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்தும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரி­வித்தார். அது­வரை எவ­ருக்கும் முற்­பணம் செலுத்­து­வ­தி­லி­ருந்தும் தவிர்ந்­து­கொள்­ளு­மாறும் அவர் வேண்­டி­யுள்ளார்.

இத­னி­டையே, இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்ள பய­ணிகள் இடைத்­த­ர­கர்­க­ளுக்கும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் இவ்­வ­ருடம் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத முக­வர்­க­ளுக்கும் முற்­பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் தலைவர் எம்.ஜி.எம்.ஹிஸாம் பொது­மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

திணைக்­க­ளத்­தினால் ஹஜ் தொடர்­பான உத்­தி­யோக பூர்வ அறி­விப்­புகள் வெளி­யா­னதும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள ஹஜ் முக­வர்­க­ளையே தங்களது பயணத்துக்கு தொடர்பு கொள்ளும் படியும் அவர் அறிவிப்புச் செய்துள்ளார்.

ஹஜ் கட்டணம் தற்போதைய டொலரின் மதிப்பு மற்றும் நாட்டின் நெருக்கடி நிலைமை, விமான பயணச்சீட்டு கட்டண அதிகரிப்பு என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும். திணைக்கள அதகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் கூறினார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 2022-04-21

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page