ஏப்ரல் 27 வரை ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணி வரையில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப் படுவதாக கூறப்பட்டு இருந்தபோதிலும் அதில் தற்போது மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேலையில் குறித்த மாவட்டங்களுக்குள் எவருக்கும் உள்நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மீண்டும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட உள்ளது.

குறித்த மாவட்டங்களில் ஏப்ரல் 24 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 ஆம் திகதி காலை 5 மணி வரையில் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஏப்ரல் 25 மற்றும் 26 ஆம் திகதிகளான வார இறுதிநாட்களில் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் வேலையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் முன்னர் குறிப்பிட்ட நிபந்தனைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


Install Akurana Today Android App to your mobile

  • Important Akurana News (அக்குறணை முக்கிய செய்திகள்)
  • Akurana Doctor Details (அக்குறணை வைத்தியர்கள் விபரம்)
  • Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
  • Akurana School News (அக்குறணை பாடசாலை செய்திகள் )
  • Akurana Promotions News ( அக்குறணை விற்பனை செய்திகள்)
  • Akurana Sales and Discounts News (அக்குறணை சலுகை / தள்ளுபடி செய்திகள்)
Read:  மீண்டும் ரணில் !!