155 பேர் கொரோனாவுக்கு பலி ! 85 ஆண்கள், 70 பெண்கள்

நாட்டில் நேற்று  (12.8.2021) மேலும் 155 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை மொத்தமாக 5,775 பேர் நாட்டில் கொவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் நேற்று 12 ஆம் திகதி கொவிட் தொற்றுக்குள்ளாகி 155 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 85 ஆண்களும் 70 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

30 வயதிற்கு கீழ் 3 பெண்களும் 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்டோரில் 27 ஆண்களும்  17 பெண்களுமாக 41 பேரும், 60 வயதும் அதற்கு மேற்பட்டோரில் 58 ஆண்களும் 53 பெண்களுமாக 111 பேர் இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இன்றையதினம்  3,142 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை  348,260ஆக அதிகரித்துள்ளது.-வீரகேசரி-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters