நாடுதழுவிய முடக்கம் குறித்து இன்று மாலை கூட தீர்மானம் எடுக்கப்படலாம்

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது, சூழ்நிலைகள் மற்றும் பிரதேசங்களுக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று (04) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நிலைமையை கருத்திற் கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் அல்லது நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் இன்று மாலை வேளையில் கூட எடுக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், தற்போது காணப்படும் நிலையில் ஊரடங்கு அவசியமற்றது என ஊடகத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter