மஸ்ஜித் ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது கொடுப்பனவு வழங்கல்

சகல மஸ்ஜித் நிருவாகிகளுக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபரகாதுஹு

விடயம்: ஊரடங்கு அமுலில் உள்ள காலப் பகுதியில்/ 15.03.2020 முதல் பள்ளி இமாம் மற்றும் ஏனைய மஸ்ஜித் ஊழியர்களுக்கு சம்பளம் / கொடுப்பனவு வழங்கல்

பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள் பள்ளிகளைப் பராமரிப்பதிலும் சமூக நலனிலும் காட்டி வரும் ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் நாம் மெச்சுகின்றோம். அதேவேளை, தங்களது சம்பளம் அல்லது கொடுப்பனவு 15.03.2020 திகதி முதல் அல்லது ஊரடங்கு அமுலில் உள்ள காலத்தில் சில மஸ்ஜித்களால் வழங்கப்படவில்லை என இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் ஏனைய மஸ்ஜித் ஊழியர்களிடமிருந்து பல முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த நெருக்கடியான காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்கள் முறையாக வழங்கப்படுகின்றன. அவ்வாறே, மஸ்ஜித் ஊழியர்கள் வேலைக்கு சமூகமளிக்காதிருப்பது அவர்களது தவறல்ல; மாறாக நாட்டின் சுகாதார அவசர கால நிலைமை காரணமாகவே மஸ்ஜித் ஊழியர்கள் கடைமைக்கு வர முடியவில்லை என்பதைத் கருத்திற் கொண்டு அவர்களது சம்பளமும் முறையாக வழங்கப்படல் வேண்டும்.

ஆகவே, மஸ்ஜித் ஊழியர்களுக்கான சம்பளம் அல்லது கொடுப்பனவினை மேலும் தாமதிக்காது வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மஸ்ஜித் நிருவாகிகளை இலங்கை வக்ப் சபை இத்தாள் பணிக்கின்றது.

ஏ.பி. எம். அஷ்ரப்
வக்ப் சபை பணிப்பாளர் மற்றும்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்

16.04.2020

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page