முதலாம் தரத்தில் இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை 35 – 40 வரை அதிகரிப்பதற்கு சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்ளும் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பொதுத் தேர்தலின் பின்னர் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் திறமை மற்றும் திறன் தொடர்பிலான தகவல்களை இலகுவாக அறிந்துக் கொள்ள கூடிய வகையில் அனைத்து மாணவர்களுக்கும் விசேட இலக்கம் ஒன்று அடையாளப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்த இலக்கம் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நிறைவடையும் வரை செல்லுப்படியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Akurana Today All Tamil News in One Place