பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகர் அலுவலகத்தில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அப் பிரதேச செயலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகர் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பிரதேச செயலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று பொல்லன்னறுவையின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டபிள்யூ.கே.எஸ். குமாரவன்ச தெரிவித்தார்.
லங்காபுர பிரதேச செயலக அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து, பணியாளர் ஒருவர் கோவிட் -19 தொற்று உடையவர் என அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் உள்ள ஒரு கொவிட் 19 எனப்டும் கொரோனா நோயாளியின் நெருங்கிய தொடர்பில் இருந்த நபரே தொற்றுக்குள்ளான ஊழியர் என்பது உறுதி செய்யப்பட்டது.
ஊழியரின் நெருங்கிய தொடர்புகளைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
Akurana Today All Tamil News in One Place