கொழும்பு IDH வைத்தியசாலையில் இருந்து நேற்று தப்பிச்சென்ற கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தேசிய வைத்தியசாலைக்கு வருகைதர முன்னர் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் சிசிரிவி காணொளிகள் மூலம் இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் வீடொன்றினுள் நுழைந்து அங்கிருந்த ஆடைகளையும் சைக்கிள் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற குறித்த நபர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹல்கஹதெனிய மண்டவில வீதியில் பயணித்துள்ளார்.
அதிகாலை 2.23 மணி அளவில் கட்டை காற்சட்டையும் மேற்சட்டை ஒன்றும் அணிந்து குறித்த நபர் பாதையில் பயணிப்பதை பாதையில் இருந்த சிசிரிவி காணொளிகள் மூலம் கண்டுகொள்ள முடிந்தது.
அவ்வாறு பயணிக்கும் நபர் வீடு ஒன்றுக்கு அருகில் நின்று தனது பாதணிகளை கையில் எடுத்து மீண்டும் அப்பாதையில் திரும்பி வந்துள்ளமை அவதானிக்க முடிகின்றது.
பின்னர் அதிகாலை 2.25 மணி அளவில் அவர் வீட்டிற்குள் நுழைந்து உள்ளமையை காணக்கூடியதாக இருந்தது.
பின்னர் அதிகாலை 2.45 மணியளவில் அவ்வீட்டின் இடதுபுறம் உள்ள வீதியினூடாக பிரதான பாதைக்கு வரும் குறித்த நபர் நீண்ட காற்சட்டை மற்றும் வேறொரு மேற்சட்டை ஒன்றை அணிந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
அதன் அடிப்படையில் குறித்த நபர் வீட்டினுள் 20 நிமிடங்கள் தங்கியிருந்தமை சிசிரிவி காணொளிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் கூரைக்கு மேல் இருந்து குறித்த நபர் அணிந்திருந்த கட்டை காற்சட்டை மற்றும் மேற்சட்டையையும் குறித்த வீட்டினர் இன்று இனம் கண்டுள்ளனர்.
பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து குறித்த ஆடை தீக்கிரையாக்கப்பட்டு குறித்த வீடும் கிருமிநாசினி தொற்று நீக்கப்பட்டிருந்தது.
சைக்கிளை திருடிச் செல்லும் நபர் நேற்று 3.21 மணி அளவில் அங்கொன சந்தியின் ஊடாகப் பயணித்து உள்ளமை அங்கு இருந்த சிசிரிவி காணொளிகளில் பதிவாகியுள்ளது.
Akurana Today All Tamil News in One Place