இலங்கையில் சம்பிரதாய முஸ்லிம்களின் சிவில் அமைப்புகளில் ஒன்றான சூபி தரீக்காக்களின் கூட்டுப் பேரவை. முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
சூபி தரீக்காக்களின் கூட்டுப் பேரவை இது கொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
கூட்டுப் பேரவையின் தலைவர் நகீப் மெளலானா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அசாத்சாலி கடந்த 16ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளமை எங்களது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் வெளியிட்ட சில ஊடக அறிக்கைகள் தொடர்பிலே கைது செய்யப்பட்டுள்ளார் என கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (ஏ.ஆர். ஏ. பரீல்)
Akurana Today All Tamil News in One Place