கொவிட் -19 நிலை காரணமாக கண்டி நகரில் மூடப்பட்ட 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
கண்டியில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மத்திய மாகாண ஆளுனர் லலித் யூ கமகே அதனைத் தெரிவித்தார்.
சுகாதார நடைமுறைகளைப் பேணிய முறையில் இவை திறக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, தக்ஷிலா கல்லூரி, டிரினிட்டி கல்லூரி, கலைமகள் கல்லூரி ஆகியன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Akurana Today All Tamil News in One Place