நாளை -23- முதல் ஒரு வாரக்காலத்திற்கு பாடசாலைகளை திறந்து குறித்த செயற்பாடுகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று (22) காலை அததெரண பிக் போகஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகள் நாளைதினம் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு கடந்த தினம் அறிவித்தது.
தரம் 06 முதல் தரம் 13 வரையான வகுப்பு மாணவர்களுக்காக மாத்திரம் பாடசாலைகள் இவ்வாறு திறக்கப்படவுள்ளது.
இதன்போது, ஏதாவது ஒரு வகையில் பாடசாலை கொவிட் கொத்தணி ஒன்று உருவானால் அதற்கு யார் பொறுப்பேற்பது என கல்வி அமைச்சின் செயலாளரிடம் வினவப்பட்டது.
அதற்கு பதிலளித்த கல்வி அமைச்சின் செயலாளர், நிச்சயமாக அரசாங்கத்தின் சார்பாக நான் அந்த பொறுப்பை ஏற்பதாக தெரிவித்தார்.
Akurana Today All Tamil News in One Place