சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளைக் கருத்திற் கொண்டு, அரபுக் கல்லூரிகள் திறப்பது தொடர்பாக அரபுக் கல்லூரி பிரதிநிதிகளுடன் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இன்று (21.11.2020) மாலை 8.00 மணிக்கு நடாத்திய (zoom Meeting) கலந்துரையாடலில் பின்வருமாறு முடிவு எடுக்கப்பட்டது.
அரசாங்கப் பாடசாலைகள் ஆரம்பித்ததன் பின்னர் நிலைமைகளை ஓரிரு வாரங்களுக்கு அவதானித்த பின்னர் மத்ரசாக்களை திறப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.
எனவே, எந்தவொரு அரபுக் கல்லூரியும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.
ஏ.பி.எம். அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.
Akurana Today All Tamil News in One Place