முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்து சகலருக்கும் ஒரே விதமான நடைமுறை கையாளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என சிங்கள ராவய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் குறிப்பிட்டார்.
சிங்கள ராவய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இது குறித்து கூறுகையில்,
கொவிட் -9 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த எவரதும் உடல்களை புதைக்க அனுமதி இல்லை என சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறும் அதே வேளையில் சிலோன் தெஹ்ஹீத் ஜமாஅத் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்களின் உடல்களை புதைக்க அனுமதி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் அனுமதி வழங்காது எவ்வாறு இவர்கள் இதனை கூற முடியும். ஆகவே அரசாங்கம் இதில் இரட்டை வேடம் போடுகிறது. எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் வளைந்து கொடுக்க முடியாது. நாட்டில் இப்போதுள்ள நிலையில் சகலருக்கும் சட்டம் ஒன்றாகவே இருக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் அது முழு நாட்டையும் பாதிக்கும். சிங்களவர் தமிழர் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் என அனைவருக்கும் இதன் தாக்கம் ஏற்படும்.
எனவே முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்து சகலருக்கும் ஒரே விதமான நடைமுறை கையாளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.
Akurana Today All Tamil News in One Place