கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்வர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க கூடாது – மெத்திகா விதானகே

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்வர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க கூடாது என  அரசுக்கு பரிந்துரை செய்வதாக ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானபீட பேராசிரியை மெத்திகா விதானகே குறிப்பிட்டுள்ளார்.

எமது நாடு கிணற்று நீரை பாவிக்கும் நாடாகும்.அடக்கம் செய்ய அனுமதிக்கும் நாடுகளில் கிணற்று நீரை பாவனைக்கு எடுத்துக்கொள்வதில்லை.

கொரோனா வைரசினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீர் மாசடையும் என்றே நாம் நம்புகிறோம்.

அந்த மாசடையும் நீரை அருந்தினால் எமக்கு நோய் எற்படாது என்பது தொடர்பில் உறுதி செய்யப்படவில்லை.

இது தொடர்பில் விஞ்ஞான ரீதியில் பரிசோதனை மேற்கொள்ளப்படாத சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க கூடாது என துறைசார் நிபுணர்கள் என்ற வகையில் தாம் அரசுக்கு பரிந்துரை செய்வதாக ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானபீட பேராசிரியை மெத்திகா விதானகே குறிப்பிட்டுள்ளார்.  

இதே வேளை கொரேனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்த ஒருவரின் உடலை அடக்கம் செய்யதால் மையவாடிகளின் மண், நீர் மற்றும் சூழல் மாசடைவதால் மக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்புகள் ஏற்படும் நிலைமை ஏற்படலாம் என ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானபீட பேராசிரியை மெத்திகா விதானகே எழுதிய கட்டுரையொன்றில் தெரிவித்துள்ளார்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter