நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸினால் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 40 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நால்வரும் 45 முதல் 63 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1. ராஜகிரிய பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது உயிரழப்புக்கு கொரோனா வைரஸ் தான் காரணம் என கூறப்படுகிறது.
2. ஒக்டோபர் 23 ஆம் திதகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொழும்பு -10 இல் வசிக்கும் 45 வயதுடைய ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி சுவாச அவதியால் உயிரிழந்துள்ளார்.
3. உதுகம்பலவில் வசிக்கும் 63 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
4. மேலும் 55 – 60 வயதுக்கு இடைப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் ஒருவரும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

வீரகேசரி பத்திரிகை
Akurana Today All Tamil News in One Place