நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் நிகழும் மரணங்கள் தொடர்பில் நாடு ஆபத்தான நிலையில் பயணிப்பதாக அறியமுடிவதாக வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
நாட்டில் முதலாவது கொரோனா தொற்றின் போது 9 மாதங்களில் 13 மரணங்கள் மாத்திரமே பதிவானதாகவும் இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 11 மரணங்கள் பதிவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மரணித்தவர்களுள் சிலர் உயிரிழந்த பின்னரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றமை பி.சி.ஆர். பரிசோதனை மூலம் இனங்காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் உயிரிழப்பு வீதம் அதிகளவில் நேரிடலாமென குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள், மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், வைரஸ் இப்போது வீடுகளுக்கு வந்துள்ளதாகவும் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். -வீரகேசரி பத்திரிகை-
Akurana Today All Tamil News in One Place