பிரதான வீதி, களனிவெலி மற்றும் புத்தளம் வீதியின் அனைத்து புகையிரதங்களும் இன்று முதல் சேவையில் ஈடுபடாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் மற்றும் கொழும்பு கோட்டைக்கு வரும் அனைத்து புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது.
கொழும்பு கோட்டை பொலிஸ் எல்லை பகுதிக்குள் இன்று மாலை தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் கரையோர புகையிரத பாதையில் நாளாந்த சேவையில் ஈடுப்படும் 6 புகையிரத சேவைகள் கொள்ளுப்பிட்டி வரையிலும் இடம்பெறும்.
உயர்தர பரீட்சை காலபகுதிக்கு அமைவாக மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக விசேட ரயில் சேவைகள் சில இடம் பெறவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். Ada-Derana
Akurana Today All Tamil News in One Place