பஸ் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தடை செய்யப்பட்டிருப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்துள்ளார்.
ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதை தவிர்க்குமாறு பஸ் உரிமையாளர்களுக்கும், நடத்துனர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இவற்றை கருத்திற் கொள்ளாமல் சில தனியார் பஸ்கள் தொடர்ந்தும் அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதாக முறையிடப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றுமாறு இவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறும்பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
Akurana Today All Tamil News in One Place