கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்தத்துக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த விண்ணப்ப முடிவுத் திகதி 2020.07.31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கான விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 31 திகதிக்கு அல்லது அதற்கு முன்னதாக பதிவுத் தபாலின் மூலம் இலங்கை பரிட்சை திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்காக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk க்கு பிரவேசிக்குமாறு பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
Akurana Today All Tamil News in One Place