பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தெஹிவலை பகுதியில் கைது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ரிஷாத் பதியுதீன் தற்போது குற்றப்புலனாய்வுப் காவலில் உள்ளார், இந்நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.
2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் இடம்பெயர்ந்தோரை அழைத்து சென்றமை தொடர்பாக பொது நிதியை தவறான முறையில் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றசாட்டுகள் ரிசாத் பதியுதீன் மீது சாட்டப்பட்டுள்ளது.
Akurana Today All Tamil News in One Place