முதலையின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று வயது சிறுமி, உயிரிழந்த சம்பவம் மீகலேவா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மீகலேவா பகுதியில் உள்ள ஏரியொன்றில் குறித்த சிறுமியும், அவரது தாயும் நேற்று மாலை நீராட சென்ற போதே, முதலையிடம் சிக்கியுள்ளால், பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் முதலையிடமிருந்து காயங்களுடன் மீட்டுள்ளனர்.
தொடர்ந்து சிகிச்சைக்காக தம்புத்தேகமா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தால்.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புத்தேகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Akurana Today All Tamil News in One Place