தேவைப்பட்டால் ஊரடங்கு பிறப்பிப்பத் தயார் ; இராணுவ தளபதி 

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக கடும் ஆபத்து நிலவுகின்ற பகுதிகளில் தேவைப்பட்டால் ஊரடங்கு பிறப்பிப்பதற்கு தயாராக உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா வைரஸ் குறித்து நாளாந்தம் வெளியாகும் புள்ளிவிபரங்களை அதிகாரிகள் அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அவர், அதிக எண்ணிக்கையாள நோயாளிகள் காணப்படும் பகுதிகளில் அவசியமானால் ஊரடங்கை பிறப்பிக்க அரசாஙகம் தயார் என தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகள் பிறப்பிக்கப்படாத பகுதிகளில் காணப்படும் நிலைமையை அவதானித்து வருகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களையும் அடையாளம் கண்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter