கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால்
மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆராயப்படும் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று ( 12) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே இதனைத் தெரிவித்தார்
சமூகப் பரவலைத் தடுப்பதற்கு அடிப்படை சுகாதார வசதிகளை பின்பற்றுவது மாத்திரமின்றி ஒவ்வொருவரும் உண்மை நிலைமையை வெளிப்படுத்துவதும் பெரும் உதவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
Akurana Today All Tamil News in One Place