கண்டி நகர எல்லைக்குள் அவதானம் மிக்க நிலையில் உள்ள கட்டிடங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகேவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (12) அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினால் 3 வாரங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
25 பேர் கொண்ட குறித்த குழுவினால் கண்டி நகரில் தெரிவு செய்யப்பட்ட 20 கட்டிடங்களை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் மேற்கொண்டு அதில் அவதானம் மிக்க கட்டிடங்கள் தொடர்பில் இனங்காணப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு அவதானமாக இருக்கும் கட்டிடங்கள் தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவதானம் தொடர்பில் எடுக்க வேண்டிய ஆலோசனைகளுடன் கூடிய வகையில் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் எஸ்.பீ.எஸ் அபேகோன் தெரிவித்துள்ளார். Ada-Derana
Akurana Today All Tamil News in One Place