நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு பொதுத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். வேட்பாளர்கள் தொடர்ந்தும் கூட்டங்களை நடத்தும் போது மக்களுடன் இணைந்து செயற்பட முற்படுவது ஆபத்தானது என்பதால் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நாம் தேர்தல் பிரசார கூட்டங்களுக்குச் செல்கின்றோம். பொது மக்கள் அவற்றுக்கு வருகை தருகின்றனர். அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்படுகின்றது. ஓரிரு வேட்பாளர்கள் தொற்றுக்குள்ளானாலும் கூட ஆயிரக்கணக்கானோரை தனிமைப்படுத்த வேண்டியேற்படும்.
எனவே அதற்கான வர்த்தமானி அறிவித்தலை மாற்றி ஜூலை மாதம் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவது பொறுத்தமானதாக இருக்கும் என்பது எமது நிலைப்பாடாகும்.
எனவே வெகு விரைவாக எமது இந்த யோசனையை கவனத்தில் எடுத்து 19 அல்லது 20 ஆம் திகதிகளில் வர்த்தமானி அறிவித்தலை மாற்றி 25 ஆம் திகதிக்கு முன்னரேனும் தேர்தலை நடத்துமாறு கோருகின்றோம். காரணம் நாட்டில் தற்போது தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதே தவிர குறைவடையவில்லை என்றார்.
Akurana Today All Tamil News in One Place