மினுவங்கொடை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
முன்னதாக மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தில் உணவகமொன்றை நடத்திவந்த 55 வயதுடைய ஒருவர் ( பொலிஸ் உத்தியோகத்தர் அல்ல) கொரோனா தொற்றுக்குள்ளானார்.
அவரது மகன் ப்ரெண்டிக்ஸ் நிறுவனத்தில் கடமையாற்றி கொரோனா தொற்றுக்குள்ளானவர்.
இதேவேளை பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இங்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.இவரின் சிறிய தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.
இதனை அடுத்து முன்னெச்சரிக்கையாக மினுவங்கொடை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அதேவேளை அங்கு கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Akurana Today All Tamil News in One Place