2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் காணாமல் போன ஐந்து வயது சிறுவன் 21 வயது இளைஞராக அண்மையில் மாளிகைக்காட்டு பிரதேசத்திற்கு வீடு திரும்பிய விடயம் தொடர்பில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
அம்பாறை பிரதேசத்தில் வளர்ப்பு தாயாராக அடையாளப்படுத்தபட்ட தாயாருக்கும் மாளிகைக்காட்டு பிரதேசத்தில் சுனாமியால் காணாமல் போன மகனாக அடையாளப்படுத்தபட்ட தாயாருக்கும் இடையே ஏற்பட்ட சிக்கல்கள் தொடர்பில் ஆராய நேற்று காலை இரு தரப்பினரையும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இரு தரப்பினரிடமும் விசாரணை செய்த சம்மாந்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இருதரப்பினரும் அந்த மகன் தனக்கு சொந்தமான பிள்ளை என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து தமது பக்க நியாயங்களை முன்வைத்ததனர்.
தீர விசாரித்த சம்மாந்துறை பொலிஸார் இவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க எதிர்வரும் ஐந்தாம் திகதி நீதிமன்றத்தில் வழக்கொன்றை பதிவுசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய முடிகிறது.
காணாமல் போனதாக மாளிகைக்காட்டு தாயிடம் திரும்பி வந்த மகன் மீண்டும் வளர்ப்பு தாயிடம் திரும்பி சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Akurana Today All Tamil News in One Place