இம்முறை புலமைபரிசில்‌ பரீட்சைக்கு புதிய அனுமதி அட்டை அறிமுகம்

தரம்‌ 5 புலமைப்பரிசில்‌ பரீட்சைக்‌குத்‌ தோற்றவிருக்கின்ற மாணவர்க்‌காக இம்முறை அனுமதிஅட்டை (Admission Card) முதன்முறையாக பரீட்சைத்‌ திணைக்களத்தால்‌ வழங்‌கப்படவிருக்கிறது.

இந்த அனுமதி அட்டையில்‌ பரீட்சை எண்‌ மற்றும்‌ விண்ணப்பதாரி பரீட்சை எழுத வேண்டிய பரீட்சை நிலையம்‌ என்பன குறிப்‌
பிடப்பட்டுள்ளன. இதுவரை காலமும்‌ அப்படியான அனுமதிஅட்டை க.பொ.த. சா.தர மற்றும்‌ உயர்‌தர பரீட்சைகளுக்கு மாத்திரமே
பாடசாலை மாணவர்க்கு வழங்கப்பட்டுவந்தது. தரம்‌ 5 புலமைப்பரிசில்‌ மாணவர்க்கு இதுவரை அனுமதி அட்டை முறைமை அமுலில்‌ இருக்‌கவில்லை என்பது குறிப்பிடத்தக்க்து.

இப்பரீட்சைக்குத்‌ தோற்றுவதற்‌காக மாணவர்களுக்கு வழங்கப்‌பட்டுள்ள அனுமதி அட்டை பரீட்‌சைக்கு முகங்கொடுக்கும்‌ போது கொண்டு வருவது கட்டாயம்‌ அல்ல.

ஒரு விண்ணப்பதாரி பரீட்சை அனுமதி அட்டையை காண்பிக்காதவிடத்து பாடசாலை மூலம்‌ வழங்‌கப்படும்‌ வருகை ஆவணத்தை கொண்டு பரீட்சகரின்‌ ஆள்‌ அடையாளத்தை உறுதிப்படுத்திக்‌ கொண்டு பரீட்சை எழுத அனுமதிக்கப்படும்‌.

மேற்படி பரீட்சை 2020 ஒக்டோபர்‌ மாதம்‌ 11 ஆம்‌ இகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்‌. பகுதி- 1 மு.ப. 09.30- 10.30 மணிவரையும்‌ பகுதி-2 11.00 – 12.15 மணி வரையும்‌ நடைபெறும்‌. இப்பரீட்சைக்குத்‌ தோற்றும்‌ அனைத்து விண்ணப்பதாரிகளினதும்‌ பரீட்சை அனுமதி அட்டை மற்றும்‌ வரவு ஆவணம்‌ என்பன உரிய பாடசாலை அதிபர்களுக்கு தபாலில்‌ அனுப்பி வைக்கப்‌பட்டுள்ளது.

அனுமதி அட்டவணை மற்றும்‌ வரவு ஆவணம்‌ கிடைக்காத பாடசாலை அதிபர்கள்‌ பரீட்சைத்‌ திணைக்களத்தை தொடர்பு கொள்‌ளுமாறு வேண்டப்படுகின்றனர்‌.

தேசிய மாணவர்‌ அடையாளக்குறியிடு அறிமுகம்‌.

இதேவேளை, இவ்வருடத்திலிருந்து அனைத்து பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கும்‌ கல்வி அமைச்சினால்‌ அங்ககேரிக்‌கப்பட்ட தேசிய மாணவர்‌ அடையாளக்‌ குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்‌ளது.

எதிர்வரும்‌ காலங்களில்‌ மாணவர்களின்‌ கல்விதகவல்கள்‌ உட்சேர்க்கப்படும்‌ போது இந்த குறியீடு முக்கியத்துவம்‌ பெறும்‌. எனவே பெற்றோர்‌ அக்குறியீடுள்ள பகுதியை வேறாக எடுத்து பெற்றோர்‌ அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்‌ என றிவுறுத்தப்பட்டுள்ளது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter