மருதானையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் என்ற பெயரில் போலி கச்சேரி ஒன்று நடத்தி செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கச்சேரியை நடத்தி சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா தனிமைப்படுத்தல் நிறைவு செய்த சான்றிதழ்களும் அங்கு தயாரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
கொரோனா தனிமைப்படுத்தல் நிறைவு சான்றிதழ் முத்திரை, நீதிபதிகளின் முத்திரைகள், அதிபர்களின் முத்திரைகள் உட்பட 220 முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் 297 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Akurana Today All Tamil News in One Place