வாக்களிப்பதற்காக கோரிக்கை விடுக்கும் எந்தவொரு நபருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் சேவை செய்யும் இடத்தில் இருந்து வாக்கு சாவடி உள்ள தூரத்தின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
40 கிலோ மீற்றருக்கு குறைவாயின் அறை நாள் விடுமுறையும், 40 முதல் 100 கிலோ மீற்றர் இருப்பின் ஒரு நாள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 100 முதல் 150 கிலோ மீற்றர் தூரமாயின் ஒன்றரை நாள் விடுமுறையும் 150 கிலோ மீற்றருக்கு அதிகமாயின் இரண்டு நாள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
Akurana Today All Tamil News in One Place