ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி முதல் க.பொ.த. உயர தர பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் உயர்தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்களையும் மற்றும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவு முதல் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து விதமான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளும் தடை செய்யப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Akurana Today All Tamil News in One Place