அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை
இன்று முதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில்லறை விலைக்கு அதிகமாக சில வர்த்தகர்கள் அரிசியை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபை இதனை மேற்கொண்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைவாக நாட்டரிசி ஒரு கிலோவின் ஆக கூடிய விலை 96 ரூபாவாகும். சம்பா அரிசி கிலோ ஒன்றிற்கு 96 ரூபா விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கீரி சம்பா ஒரு கிலோ 120 ரூபா எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Akurana Today All Tamil News in One Place