இவ்வருட ஹஜ் யாத்திரையை பூர்த்தி செய்து கொண்டு நாடு திரும்பியுள்ள யாத்திரிகர்கள் தங்களது பயண ஏற்பாடுகளைச் செய்த முகவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை எழுத்து மூலம் அல்லது மின்னஞ்சல் மூலமே முன்வைக்க முடியும்.
தொலைபேசி மூலம் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்களில் சிலர் தொலைபேசியூடாக ஹஜ்முகவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர். சவூதி அரேபியாவில் தங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த ஹோட்டல்களில் மாற்றம், உடன்படிக்கைக்கு மாறாக அஸீஸியாவில் தங்க வைக்கப்பட்டமை மற்றும் தம்பதிகளுக்கு ஹோட்டலில் தனியறை வழங்குவதாக அளித்த உறுதி மறுக்கப்பட்டமை போன்ற முறைப்பாடுகள் தொலைபேசியூடாகவே முன்வைக்கப்பட்டுள்ளன என அரச ஹஜ்குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரிவித்தார்.
முறைப்பாடுகள் எழுத்து மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை பக்கம் 01 – 04/08/2022
Akurana Today All Tamil News in One Place