முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் தீர்மானத்தில் மாற்றம்
ஹஜ்ஜுக்குத் தேவையான டொலர்களை நாட்டுக்கு அறிமுகமானவர்கள் மூலம் கொண்டுவந்து ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முஸ்லிம் சமய அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு இவ்வருடம் ஹஜ் யாத்திரையில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்பதில்லை என ஹஜ் நிறுவனங்கள் முன்னதாகவே தீர்மானித்திருந்தனர்.
இவ்வருட ஹஜ் யாத்திரையில் 1,585 இலங்கையர்களுக்கு பங்குபற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அருண பத்திரிகை 8/6/2022
Akurana Today All Tamil News in One Place