அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு பேச்சு நடத்துவது எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, சர்வதேச நாணய நிதியமாக இருக்கலாம். சர்வதேச அமைப்புகளாக இருக்கலாம். அவற்றுடன் பேச்சு நடத்துவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. ஆனால், மேற்படி தரப்புகளால் முன்வைக்கப்படும் நிபந்தனைகளே முக்கியம்.
அவை நாட்டுக்கு எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது பற்றி ஆராய வேண்டும். இறுதியில் நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படாத தேர்வையே நாம் நாட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
– தினகரன் – (2022-02-07 07:22:07)
Akurana Today All Tamil News in One Place