தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் சந்தையில் மெழுகுவர்த்திகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக பல நகரங்களில் உள்ள வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஹட்டன் உள்ளிட்ட முக்கிய பெருந்தோட்ட நகரங்களில் மெழுகுவர்த்திகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிய மெழுகுவர்த்தியின் மொத்த விலை ரூ.7.50 ஆகவும், சராசரி அளவு மெழுகுவர்த்தி ரூ.37.50 ஆகவும் விற்கப்படுகிறது.
ஒரு பொட்டலத்தில் 40 மெழுகுவர்த்திகள் இருப்பதாகவும், குறுகிய காலத்தில் சுமார் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மெழுகுவர்த்தி உற்பத்திக்கு தேவையான மெழுகு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படாததால் சந்தையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
Akurana Today All Tamil News in One Place