குறிப்பிடப்பட்ட விலைக்கு அதிக விலையில் சீமெந்தை விற்பனை செய்யும் வியாபாரிகளை தேடி நாடு பூராகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, கடந்த சில தினங்களில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, அநுராதபுரம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் சீமெந்தை அதிக விலைக்கு விற்பனை செய்த 56 விற்பனை நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக சீமெந்து விற்பனை மறுப்பு, சீமெந்தை மறைத்துவிட்டு நுகர்வோரு இல்லை தெரிவித்தல், விதிமுறைகளுக்கமைய விற்பனை செய்தல் மற்றும் சீமெந்து தொகையை மறைத்து வைத்தல் ஆகிய விடயங்களுக்கு இடமளிக்க கூடாது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பொருளொன்று இல்லையென்று தெரிவித்தல் மற்றும் சீமெந்து தொகையை மறைத்து வைத்தல் ஆகிய தவறுகளை செய்யும் வியாபாரிகளிடமுள்ள சீமெந்து தொகையை தடைசெய்வதற்கும், அந்த தொகை அதிகாரசபையில் சமர்ப்பித்ததன் பின்னர் , அதிகாரசபையின் உத்தரவுக்கமைய அந்த தொகையை அரச உடமையாக்குவதற்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அதிகாரம் இருப்பதாக அந்த அதிகாரசபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, சட்டத்தை மீறி முன்னெடுக்கப்படும் விற்பனை நடவடிக்கைகளுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமென வியாபாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-தமிழன்.lk– (2022-01-25)
Akurana Today All Tamil News in One Place