இன்று (13) முதல் லண்டன், டோக்கியோ, மெல்போர்ன் மற்றும் ஹொங்காங் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் பயணிகள் விமான போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, ஸ்ரீ லங்கா விமான நிறுவனம் நேற்று (12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது சுகாதார மற்றும் சுற்றுலா நிபந்தனைகளுக்கு அமைய பயணிக்க தகுதியுடைய பயணிகளுக்கு மாத்திரம் இந்த விமானப் பயண சேவை வழங்கப்படவுள்ளது,
அத்துடன் இந்த பயண இடங்களுக்கு பயணிக்க விரும்புவோர் அருகிலுள்ள சுற்றுலா பிரதிநிதியூடாக விமான டிக்கெட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது,
Akurana Today All Tamil News in One Place
