இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையிலான புதிய சுகாதார வழிகாட்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, திருமண நிகழ்வுகளில் மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், திருமண நிகழ்வுகளில் மதுபான பாவனைக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த தடை இந்த புதிய சுகாதார வழிகாட்டியின் ஊடாக தளர்த்தப்பட்டுள்ளது.
இதுதவிர, மரண சடங்குகளில் ஒரு தடவையில் 30 பேர் பங்கேற்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டி வருமாறு:



ஹிரு செய்திகள் –hirunews.lk– (2021-12-16 09:13:43)
Akurana Today All Tamil News in One Place