பெட்ரோலிய, துறைமுக, மின்சார சபை ஊழியர்கள் கொழும்பில் இன்று (08) எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று (08) நண்பகல் 12 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தவுள்ளதாக பெட்ரோலியம், துறைமுகங்கள் மற்றும் மின்சார ஒன்றிணைந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஊழியர்கள் இணைந்து கையெழுத்திட்ட மகஜரை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரஞ்சன் ஜயலால் கூறியுள்ளார்.
-தமிழன்.lk– (2021-12-08)
Akurana Today All Tamil News in One Place