இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை கெளரவிக்கும் முகமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த இராப்போசன நிகழ்வு செவ்வாய்க்கிழமை (07) வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிக துணைத் தூதுவர், ஈழமக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜி. பொன்னம்பலம் எம்.பி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காஸிம், எம்.எஸ்.தெளபீக், அல்ஹாபிழ் நஸீர் அஹமட், இம்தியாஸ் பாக்கிர் மாக்கர், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிக துணைத் தூதுவர் போன்றோர்கள் இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரினால் பொன்னாடை போத்தி கௌரவித்தனர்.
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின்போது அரசுக்கு ஆதரவளித்த காரணத்திற்காக கட்சியின் பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
– மாளிகைக்காடு நிருபர் – -தமிழன்.lk– (2021-12-08)
Akurana Today All Tamil News in One Place