கண்டி − ரம்புக்கேவெல − அங்கும்புர பகுதியில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
அங்கும்புர பகுதியிலுள்ள வீடொன்றின் மீதே இந்த மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.
சம்பவத்தில் அங்கும்புர பகுதியைச் சேர்ந்த 56 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்
-தமிழன்.lk
Akurana Today All Tamil News in One Place