கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளை சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்படுவதைப் தடுப்பதற்காக இது வரையில் நடைமுறைப்படுப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் திங்கட்கிழமை தளர்த்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
கொழும்பு, கம்பஹா , களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல பொலிஸ் பிரிவிலும் கண்டி மாவட்டத்தில் அலவத்துகொட பொலிஸ் பிரிவிலும், அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலும் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு சட்டம் நாளை திங்கட்கிழமை காலை 5 மணிக்கு நீக்கப்படவுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் நேற்று 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளைமறுதினம் திங்கட்கிழமை காலை 5 மணி வரை அமுலில் இருக்கும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உள்நுழைதல் மற்றும் வெளியேறுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதிக்குள் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், விவசாய நடவடிக்கைகளுக்கும் மேற் கூறப்பட்ட நிபந்தனைகள் உரித்தாகாது .
Akurana Today All Tamil News in One Place
