கண்டி வாழ் முஸ்லிம் வர்த்தகப் பிரமுகர்களின் அனுசரணையுடன் ஸம் ஸம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 70 மில்லியன் ரூபா செலவில் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு இருதய சத்திர சிகிச்சை கட்டிடத் தொகுதியை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான ஆரம்ப இணக்கப்பாட்டுக்கான ஒப்பந்தக் கூட்டம் வைத்தியசாலையின கேட்போர் கூடத்தில் (27) இடம்பெற்றது.
வைத்தியசாலையின் பிரதிப் பணிபாளர் சந்தன விஜேசிங்க ஸம்ஸம் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி யூசுப் முப்தி, கண்டி மாவட்ட ஸம் ஸம் நிறுவனத்தின் இணைப்பதிகாரி தொழிலதிபர் மன்சூர், கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆர். சித்தீக் மற்றும் தலத்வத்துர பஞ்சா திஸ்ஸ நாயக்க தேரர் வஜிரஞான நாயக்க தேரர், .கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி எச். உமர்தீன் ஸம் ஸம் நிறுவனத்தின் அதிகாரிகள், வைத்தியசாலை அதிகாரிகள் முஸ்லிம் வகலந்து கொண்டதை இங்கு படங்களில் காணலாம்.
இக்பால் அலி
Akurana Today All Tamil News in One Place