15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகப்படுத்தி தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவரை தேசிய சிறுவர் பாதுகாப்பு
அதிகார சபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த வருடம் ஜூன் மாதம் தனது பெற்றோருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் கண்டியில் உள்ள தனது மாமா வீட்டுக்கு குறித்த சிறுமி சென்றுள்ளார்.
அப்போது பஸ்சில் வைத்து குறித்த இளைஞனுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளதுடன். அதனை காரணம் காட்டி குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் பின்னர் அவரை கொழும்பு கோட்டை பிரதான பஸ் தரிப்பிடத்தில் விட்டு சென்றுள்ளார்.
அதன் பின்னர் அந்த சிறுமி பெண் பிள்ளை ஒன்றை பிரசவித்துள்ளார்.
இதனை அடுத்து வைத்தியர்கள் இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவித்துள்ளனர்.
அதன் பின்னர் அவரின் தொலைப்பேசி இலக்கத்தை வைத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் 22 வயதான அந்த இளைஞன் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் பழக்கடை ஒன்றில் வேலை செய்வதை கண்டறிந்துள்ளனர்.
அப்போதும் அங்கிருந்து தப்பிய குறித்த இளைஞன் பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அந்த இளைஞன் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
Akurana Today All Tamil News in One Place